கவிஞர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது சுமற்றிய குற்றச்சாட்டு பொய் என போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
லீனா மணிமேகலை - சுசிகணேசன்:
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சுசி கணேசன் தான் காரணம் என லீனா மணிமேகலை சமூக வலைதளத்தில் பதிவிட்டது காழ்ப்புணர்ச்சியால் பதிவு செய்யப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை பிரபல இயக்குனர் சுசி கணேசன் மீது மீ டு (me too) புகார் அளித்திருந்தார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கனடாவில் இருக்கிறார் லீனா மணிமேகலை.
காளி பட போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய லீனா மணிமேகலை பல்வேறு மாநிலங்களில் அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் (கனடாவில் )தங்கி இருக்கிறார . இவர் இயக்குனர் சுசிகணேசன் மீது மீ டூ புகார் அளித்திருந்தார். அதனை எதிர்த்து, லீனா மணிகேகலை மீது சுசி கணேசன் கிரிமினல் மற்றும் சிவில் மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.
பதிலளிக்காத லீனா:
வழக்கு நான்கரை ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையில் நான்கு மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் , சுசி கணேசனால் தன் உயிருக்கு ஆபத்து என்று லீனா ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தார். தன் மீது பொய் புகார் கூறியதோடு அல்லாமல் ஜாதி மத மோதலை தூண்டும் விதமாக பேசி வருவதாகவும் இந்த குற்றச்சாட்டில் இருக்கும் உண்மையை கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்குனர் சுசி கணேசன் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பி விசாரித்த காவல்துறை, கவிஞர் லீனா மணிமேகலை காழ்ப்புணர்ச்சி காரணமாக சுசி கணேசன் மீது பொய்யான புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கனடாவில் இருக்கும் லீனா மணிமேகலை எவ்வாறு இயக்குனர் சுசி கணேசன் உயிருக்கு ஆபத்தாக இருப்பார்? என்ற கேள்விக்கு மீனா மணிமேகலை முறையாக பதில் அளிக்கவில்லை.
பொய் குற்றச்சாட்டு:
இதனையடுத்து பொய்யான குற்றச்சாட்டை சமூக வலைதளத்தில் லீனா மணிமேகலை பதிவிட்டதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இப்பிரச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு சுசி கணேசனை அறிவுறுத்தி கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் புகாரை முடித்து வைத்திருக்கிறது. பிரபல இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை மீ டு புகார் அளித்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யாக சமூக வலைதளத்தில் லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது