ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களின் விருப்பமனு இன்று தொடங்கி ஜனவரி 26ஆம் தேதி வரை பெறப்படும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 




ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்களின் விருப்பமனு இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பெறப்படும் என இடைக்கால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று காலை 10 மணிக்கு தொடங்கி ஜனவரி 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனு பெறப்படும். மேலும் விருப்பமனுவை ஆன்லைன் மூலம் 15,000 ரூபாய் செலுத்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.