Thanjavur Tragedy LIVE: தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைப்பு
Thanjavur Temple Car Accident LIVE Updates: தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
தஞ்சை தேர்த்திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான பரிந்துரைகளை அளிக்கவும், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயிந்த் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு.
தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் நடந்த தேர் திருவிழா என தெரிவித்திருக்கிறார்.
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மருத்துவர் அன்புமணி இரங்கல்
தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
தஞ்சை தேரோட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க தஞ்சை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதல்வர் அங்கிருந்து காரில் தஞ்சை செல்கிறார்
தஞ்சை தேரோட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்துள்ள மாநில அரசு. தலா 2 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தலா 1 லட்சம் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு குடியரசு ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருஞ்சோகம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50 க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு விலகி நின்றதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
சாலையை விரிவுபடுத்தும்போது மின்கம்பிகளை மீண்டும் ஓரமாக அமைக்காததே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் 4 பேர் மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
Background
தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தேர் திருவிழா நிறைவடைந்து, அப்பர் கோயிலுக்கு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -