தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேன் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.


தனியார் பள்ளி வேனில் பயணித்த 4 குழந்தைகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


திருச்செந்தூர் சென்று திரும்பிய இந்தக் காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்து கொண்டிருந்த பைக் ஒன்று நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்நிலையில், பைக்கில் இருந்து கீழே விழுந்தவர் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திருப்பிய நிலையில், அந்தக் கார் எதிரே வந்த தனியார் பள்ளி வாகனத்தின் மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 


இந்நிலையில், முன்னதாக இந்தக் கோர விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசி டிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.