உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்திற்குள்ளேயே நடந்து முடிந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனுமதியுடன் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான பணிகளில் கோயில் நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடத்தில் தற்போது நிரந்தர பாலத்தில் நீரை நிரப்பால் பணிகள் குறித்தும், விழாவிற்கான மேடைகள் அமைக்கும் பணிகள் குறித்தும் மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி மற்றும் துணை மேயர் நாகராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சோனியா காந்தி குறித்து வலைத்தளங்களில் அவதூறு - நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனை தொடர்ந்து ஓபுளாபடித்துறை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 2.12 லட்சம் பங்குத்தொகை கொடுத்தால் மட்டுமே அரசு வீடு - அரசின் உதவியை எதிர்நோக்கும் மலைவாழ் மக்கள்