நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, தலைவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் நாட்டு மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறி வருகின்றனர்.


தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பவருமான தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.






தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ள கிருஷ்ண ஜெயந்தியில், அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.





மேலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இந்நாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகிட வேண்டுகிறேன். அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்  என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் அவரும் அவரது கணவரும் கிருஷ்ணர் சிலையுடன் இருக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


தமிழிசை சவுந்திரராஜன் தவிர பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.