சென்னை. கே.கே.நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 24-ந் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


ஜூன் 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ள அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. இந்த நிலையில், போலீஸ் காவல் முடிந்து இன்று அவர் மீண்டும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். ஆனால், ராஜகோபாலன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.