மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி (நாளை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த மதுக்கூடங்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த மதுக்கூடங்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல் 3-ஏ, எப்எல் 3-ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விதிமுறையை மீறி நாளை மதுக்கடை திறக்க கூடாது, அப்படி திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. இதனால், மது பிரியர்கள் இன்றே சரக்குகளை வாங்கி வைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் இன்று கூட்டம் அலைமோதுகிறது.






மேலும், நாளை அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகத்தில் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.




பிற முக்கியச் செய்திகள்:










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண