அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்படும் எனவும் அறிவித்தார்.  விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


 






மேலும்,  “சமத்துவநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி எடுத்துகொள்ளப்படும். பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடுவதுபோல் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும். சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலம் சமப்படுத்திய போராளி அம்பேத்கர். சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தை தனது பரந்த அறிவால் விடிய வைத்தவர் என்றார். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழில் வெளியிடப்படும்” என்று கூறினார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண