சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது வழக்கு ஒன்றை பத்திரிகையாளர் சேகர்ராம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சிலை கடத்தல்  தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்ததாகவும் குற்றசாட்டுகளை கூறினார். மேலும் இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுவில்  கூறி இருந்தார்.




இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு  வந்தது. விசாரணையின் போது , மனுதாரரின் அடையாள அட்டை நீதிபதிகளிடம்  வழங்கப்பட்டது.அதில்  இன்னொருவர் அடையாள அட்டையும் இருந்தது, அதை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி  அடைந்தனர். இதில் , பத்திரிகையாளர் சேகர்ராமின் அடையாள அட்டையும்,  சிலை கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி காதர் பாஷாவின்  அடையாள அட்டையும் இருந்தது.


பத்திரிகையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள்  பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் எத்தனை பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் உள்ளனர் உள்பட பல கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்


இந்த வழக்கு  நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உன்னதமான பத்திரிகை பணியை சிலர் தவறாக பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.தமிழ் நாட்டில் இருக்கும் கோயில்கள் 1000 ஆண்டுகள் பழமையானது இவற்றில், நிறைய சிலைகள் காணாமல் போயுள்ளது. இது தொடர்பான பெரும்பாலான  வழக்குகள் ரத்து செய்யப்படும் நிலையில் தான்  உள்ளது. ராஜராஜ சோழன் சிலை காணாமல் போய் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு எந்த ஆதாரமும் கிடைக்க  வில்லை.மேலும், வழக்கு ஏதும் பதிவு செய்ய பட வில்லை.




என்னதான் தொழில் நுட்பம் வளர்ந்து இருந்தாலும், தஞ்சை பெரிய கோவில்போன்ற கலை நயம் மிக்க கோயிலை தொழில்நுட்பத்தின் உதவியுடன் கட்ட  முடியுமா என சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது போன்ற பழமையான  கோவில்களையும்,அங்கு இருக்கும் சிலைகளையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.  ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும்  இது போன்ற  பழமையான கோவில்களை பாதுகாக்கவேண்டும். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை  20-ந் தேதிக்கு தள்ளி  வைத்தனர். சிலைகள் மீட்பில் பொன்மாணிக்கவேல் மும்முரம் காட்டியதும், பல சிலைகளை அவர் மீட்டு வந்ததும் அனைவரும் அறிந்ததே. அவரது நடவடிக்கையால், மாயமான பல சிலைகள் மீட்கப்பட்டன. இந்நிலையில் தான் அவர் மீது இந்த வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.