தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது. இதனால், வெப்பநிலை சற்று தணிந்ததாக மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வரும் நாட்களில் மழை பெய்து வரும் சாத்தியக்கூறுகள் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில், கடந்த 24 மணி நேரத்தில் எங்கு அதிக மழை பெய்தது, எங்கு வெப்பநிலை அதிகமாக இருந்தது, அடுத்த 6 நாட்களில் வெப்பநிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம்:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):விழுப்புரம் (விழுப்புரம்) தலா 5,ராஜபாளையம் (விருதுநகர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) தலா 3;பர்லியார் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), மேட்டூர் AWS (சேலம்), குன்னூர்) AWS (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 2;
கூடலூர் பஜார் (நீலகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), சோளிங்கர் '(ராணிப்பேட்டை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), செஞ்சி (விழுப்புரம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி) கொடைக்கானல் (திண்டுக்கல்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்). தேவாலா (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி) தலா 1 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலை :- கரூர் பரமத்தி: 38.0° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்): கரூர் பரமத்தி: 21.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2 டிகிரி செல்சியஸ் குறைந்தும் ஏனைய இடங்களில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமின்றி இருந்தது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், ஒருசில இடங்களில் இயல்பை விட 1-3 டிகிரி செல்சியஸ் குறைவாகவும் இருந்தது.
7 தினங்களுக்கு வெப்பநிலை:
24-03-2025 மற்றும் 25-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
27-03-2025 முதல் 29-03-2025 வரை: தமிழகத்தில் ஒருசிவ இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.
சென்னை வானிலை :
இன்று (24-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (25-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
24-03-2025 மற்றும் 25-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
26-03-2025 முதல் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
27-03-2025 மற்றும் 28-03-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.