தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய  வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:


கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை,திருச்சி, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் தேனி ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை,  தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


ஜூன் 5 ஆம் தேதி, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


ஜூன் 6 மற்றும் 7 ஆம் தேதி,  தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதேபோல் ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதி, தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:


03.06.2024 முதல்  05.06.2024 வரை:  அதிகபட்ச வெப்பநிலை,   தமிழகம்,    புதுவை    மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் (1-3°  செல்சியஸ்) குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.


06.06.2024 மற்றும் 07.06.2024:அடுத்த இரண்டு தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் 1-2°  செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசான  மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 39.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 38.4° செல்சியஸ் (-0.2° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில்  37.4° செல்சியஸ் (-0.5° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.


கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 10, பெரியகுளம் (தேனி) 9, கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி) 8, கரியகோவில் அணை (சேலம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பெரியகுளம் PTO (தேனி) கமுதி (ராமநாதபுரம்) தலா 7, மாரண்டஹள்ளி (தர்மபுரி), அவினாசி (திருப்பூர்), கங்கவல்லி (சேலம்), நம்பியூர் (ஈரோடு) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.