TN Weather: மக்களே அலெர்ட்! 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை; 3 நாட்கள் இருக்கு!
மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் இன்று முதல் மார்ச் 10வரை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். அடுத்து வரும் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதாவது மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தில் மார்ச் 9 வரை இயல்படை விட 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக அதிகரிக்க கூடும். சென்னையில் அதிகபட்சமாக 35லிருந்து 36 டிகிரி செல்சியஸாக வெப்பம் அதிகரிக்க கூடும். அதேபோல் புதுச்சேரி காரைக்காலிலும் அதிகபட்ச வெப்பம் 35 லிருந்து 36 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
மார்ச் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்க கூடும்.
அதேபோல், 11 ஆம் தேதியும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்க கூடும்.
12ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்க கூடும்” எனத் தெரிவித்துள்ளது.