மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி


”ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் ஏன்? அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம், அவரால் பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாடும் கேட்கிறது. லட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்"- முதலமைச்சர் ஸ்டாலின்


தங்கம் விலை சரிவு


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 64 அயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20 ரூபாயாக உள்ளது.


நாட்டின் பெருமை - இளையராஜா


சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார் இசைஞானி இளையராஜா. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா. நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன்” என இளையராஜா தெரிவித்தார்.



வருமான வரித்துறையில் புதிய விதிகள்


அடுத்த ஆண்டு முதல் வருமான வரி அதிகாரிகள், தனிநபரின் இ-மெயில், சமூக வலைதள கணக்குகளை அவர்களின் அனுமதியின்றி அணுகலாம் என தகவல். வருமானம் அல்லது சொத்துக்கள் பற்றிய முழுத் தகவலையும் வெளியிடவில்லை என அதிகாரிகள் சந்தேகித்தால், அவரின் மின்னஞ்சல், வங்கி மற்றும் சமூக வலைதளக் கணக்குகளைப் பயன்படுத்தி உண்மையைப் பரிசோதிக்க முடியும் என கூறப்படுகிறது


குஜராத் தான் முதலிடமா?


சட்ட விரோதமாக இந்தியர்களை நாடு கடத்தும் ஏஜெண்ட்களின் இனப்பெருக்க இடமாக குஜராத் மாநிலம் இருப்பதாக அமலாக்கத்துறை தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4,500 கடத்தல் ஏஜெண்ட்களில் 2,000 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய வைக்க இந்த ஏஜெண்ட்கள் உதவியுள்ளனர்.


இனி ஆர்.ஆர்.பி. மூலமே தேர்வு நடத்தப்படும் - ரயில்வே அமைச்சகம்


இனி அனைத்து பதவி உயர்வு தேர்வுகளையும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) மூலம் நடத்தவும், பொதுவான முறையில் கணினி அடிப்படையில் நடத்தவும் ரயில்வே ந்ர்வாகம் முடிவும் செய்துள்ளது. இந்த தேர்வுகள் ஒரு காலண்டர் அடிப்படையில் நடத்தப்படும் என்றும், இதற்காக அனைத்து ரயில்வே மண்டலங்களும் ஒரு காலண்டரை உருவாக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஹமாஸ் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை


ஹமாஸ் வசம் உள்ள அமெரிக்க பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அந்த அமைப்பினருடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையாக இருந்தால், 1997-ஆம் ஆண்டுக்கு பிறகு ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். ஹமாஸ் பிடியில் 59 பிணைக்கைதிகளில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் 5 பேர் என கூறப்படுகிறது.


ஒரு Cheeto ₹76 லட்சத்திற்கு ஏலம்


அமெரிக்கா: பிரபல போக்கிமான் கார்ட்டூனில் வரும் Charizard கதாபாத்திரத்தின் உருவம் கொண்ட ஒற்றை Cheeto ₹76 லட்சத்திற்கு ஏலம் போனது! பார்ப்பதற்கு டிராகன் போல தோற்றமளிக்கும் 3 இன்ச் கொண்ட இதற்கு 'Cheetozard' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 2018 முதல் 2022ல் மிகவும் பிரபலமாக இருந்தது. CHEETO என்பது குர்குரேவைப்போல ஒரு வகை சிப்ஸ் ஆகும்.


ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து


ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்தியா 5வது முறையாகவும், நியூசிலாந்து மூன்றாவது முறையாகவும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


மோசமான சாதனை படைத்த தென்னாப்ரிக்கா


ஐசிசி போட்டிகளில் அதிகமுறை நாக்-அவுட் போட்டிகளில் தோல்வியுற்ற அணி என்ற மோசமான சாதனையை தென்னாப்ரிக்கா படைத்துள்ளது. நியூசிலாந்து உடனான அரையிறுதி தோல்வியின் மூலம், நாக்-அவுட்டில் 12வது முறையாக தோல்வியுற்றுள்ளது. இந்த பட்டியலில் 11 மற்றும் 10 தோல்விகளுடன், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.