தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வங்கக்கடல் பகுதியில் அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் இன்று 32 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் கொட்டித் தீர்க்கும் கனமழை அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை பகுதியில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வண்டலூர் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை புறநகர் பகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டி, தாம்பரம், திருப்போரூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பல்லாவரம், ஆலந்தூர், அரக்கோணம், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், பெரம்பூர், சோழிங்கநல்லூர், திருக்கழுக்குன்றம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : தொடரும் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மேலும் படிக்க : தீபாவளி: நீங்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது: அரசு சொல்லும் வழிகாட்டும் நடைமுறை இதுதான்