TN Rain Update: இன்னைக்கு மழை பெய்யுமா? பெய்யாதா... வானிலை நிலவரம் இது தான்!

TN Weather : நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வெப்பமானது சற்று தணிந்தது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் நேற்று பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

திடீர் மழை:

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை காலத்தை முன்னறிவிக்கும் வகையில் வெப்பநிலையானது சற்று அதிகரித்தே இருந்தது, இதன் காரணமாக மதிய வேளைகளில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு வானிலை மையம் சார்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வெப்பமானது சற்று தணிந்தது. 

கீழடுக்கு சுழற்சி:

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று காலை முதலே சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வெலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்தது. 

சென்னையில் மழை:

முக்கியமாக சென்னையில் எழும்பூர், தி.நகர், கிண்டி, ஆலந்தூர், ஆயிரம் விளக்கு, மதுரவாயல், வில்லிவாக்கம், பெரம்பூர், அமைந்தகரை, வேளச்சேரி, தண்டையார்பேட்டை, அம்பத்தூர்,ஆவடி, தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இந்த சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்றும் மழை:

தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வெலி, விருதுநகர் , கன்னியாகுமரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 செ.மீ மழையும், ராமநாதபுரம் 8 செ.மீ, திருவாரூர் 7 செ.மீ, உதகை மாவட்டக் குன்னூரில் 6 செ.மீ மழையும் நாகையில் 6 செ.மீ மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை தொடரும்:

மேலும் இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் தமிழ்நாட்டில் வரும் 16 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியே செல்லும் போது தேவையான முன்னெரிச்சை நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. 

Continues below advertisement