தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் மாதம் 13ஆம் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. 


இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு தொடர்பான தேதி மாறும் என்ற தகவல் கிடைத்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு தேதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது. 




முன்னதாக ஆசிரியர்கள் அனைவரும் 20ஆம் தேதி வரை  ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்,''1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்துக் கல்வி வகுப்புகளுக்கும் இன்று (மே 13ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (மே 14) முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இந்த நிலையில், தேர்வு விடைத் தாள் திருத்தம், மதிப்பெண் கணக்கீடு  உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் மே 20-ம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்.



தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, எமிஸ் உள்ளீட்டில் உள்ள தகவலும் பள்ளி வருகை பதிவேடும் ஒரேபோல் சரியாக இருக்க வேண்டும். அந்த விவகாரங்கள் வட்டாரக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் தவறான தகவல் இருந்தால், அதை சரிசெய்ய வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இதே விதிமுறைகள் பொருந்தும். 


அதே நேரத்தில் பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இந்தப் பணியைப் பிறகு மேற்கொள்ளலாம். ஏற்கெனவே மேலே குறிப்பிட்டுள்ள பணியை மே 20ஆம் தேதிக்குள் முடிக்கும் பள்ளி ஆசிரியர்கள், கடைசி நாள் வரை பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. 


அதேபோல வெளிநாடு செல்ல ஏற்கெனவே தடையில்லாச் சான்றிதழ் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கும் மே 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல நாளை (மே 14) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்''. 


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 



கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பள்ளிகள் கடந்த 3 மாதங்களாகத்தான் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கின. வழக்கமாகப் பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டும் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து விடும். கோவிட் காரணமாகப் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போன நிலையில், இந்த முறை மே 5ஆம் தேதிக்குப் பிறகே ஆண்டு இறுதித்தேர்வுகள் தொடங்கின. இன்று வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குத் தேர்வு நடைபெறுகிறது.   1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  அண்மையில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வுக்கு மட்டும் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண