- டிட்வா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் சுற்றுலா தளங்கள் இன்று மூடல்
- டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
- இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் டிட்வா புயல், மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
- டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கையாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
- தென்மேற்கு வங்க கடல் பகுதியில் டிட்வா புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் சென்னையில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சிலி அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!
- சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடிக்கு இன்று 54 விமானங்கள் ரத்து. டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக அறிவிப்பு.
- புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம். மண்டபம், மானாமதுரை, ராமநாதபுரம், மதுரையில் இருந்து புறப்படும் என அறிவிப்பு.
- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 1120 ரூபாய் உயர்ந்து சவரன் 95,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Tamilnadu Roundup: தமிழ்நாட்டை நெருங்கும் டிட்வா.. சுற்றுலா தளங்கள் மூடல்! மீண்டும் எகிறிய தங்க விலை
ஜேம்ஸ் | 29 Nov 2025 10:05 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் நவம்பர் 29 ஆம் தேதியான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
இன்றைய முக்கிய செய்திகள்
NEXT PREV
Published at: 29 Nov 2025 10:05 AM (IST)