திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து பீகார் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் 10 பெட்டிகள் தடம்புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

18 ரயில்கள் ரத்து:


இந்த நிலையில், இந்த விபத்தில் தடம்புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினரும் அதிகாரிகளும் ஈடுபட்டாலும் மழை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:



  • வண்டி எண் 16111 : திருப்பதி – புதுச்சேரி

  • வண்டி எண் 16112 : புதுச்சேரி – திருப்பதி

  • வண்டி எண் 16203 : சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 16204 : திருப்பதி – சென்னை சென்ட்ரல்

  • வண்டி எண் 16053 :  சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 16054 : திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 16057 : சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 16058 : திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 16041 : அரக்கோணம் – புதுச்சேரி ரயில்

  • வண்டி எண் 16042 : கடப்பா – அரக்கோணம் ரயில்

  • வண்டி எண் 06727 : சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 06728 : திருப்பதி – சென்னை சென்ட்ரல் ரயில்

  • வண்டி எண் 06753 : அரக்கோணம் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 06754 : திருப்பதி – அரக்கோணம் ரயில்

  • வண்டி எண் 12711 : விஜயவாடா – சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 12712 : சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 06745 : சூலூர்பேட்டை – நெல்லூர் எக்ஸ்பிரஸ்

  • வண்டி எண் 06746 : நெல்லூர் – சூலூர்பேட்டை எக்ஸ்பிரஸ்


 


இந்த 18 ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் பல பயணிகளும் ரயில் நிலையத்தில் குவிந்தனர். பின்னர், அவர்கள் ஏமாற்றத்துடன்  திரும்பினர்.