தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு விதிமுறைகள் அமலாகிறது.


16-2-2022 முதல் 2-3-2022 வரை அமலபடுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறைகள்:



  • சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்

  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்

  • இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்


மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிககைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.  







  • நர்சரி பள்ளிகள் மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது

  • பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது

  • திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

  • உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி

  • துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி

  • உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்களில் 100% வாடிக்கையாளர்களுடன் அனுமதி

  • உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 100% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை

  • அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் 100% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி

  • அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

  • அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப் பூங்காக்கள் (Entertainment/Amusement parks) நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண