TN Rain Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், மற்றும் கோவை ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நீர்வரத்து:
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 5,258 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 6,548 கன அடியாக அதிகரித்துள்ளது.