தமிழ்நாட்டில் இன்று இரவு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


Also Read: அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு


Also Read: Ponmudi: மிரட்டிவிட்ட ஸ்டாலின்: உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி!






தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு வானிலை:


நாளை ( 13:04-2025 ) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14-04:2035 முதல் 18-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை வானிலை :


இன்று ( 12-04-2025 ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (13-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது