தமிழ்நாட்டில் இன்று இரவு திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை,ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement






தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை:


மேற்கு இசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக  இன்று நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Also Read: Ponmudi: மிரட்டிவிட்ட ஸ்டாலின்: உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி!


நாளை ( 13:04-2025 ) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


14-04:2035 முதல் 18-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:


12-04-2025 முதல் 14-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
15-04-2025 மற்றும் 16-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
12-08-2025 பகல் 14-04-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.


12-04-3025 முதல் 18-01-20 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.


சென்னை வானிலை முன்னறிவிப்பு:


இன்று ( 12-04-2025 ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


நாளை (13-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



வெப்பநிலை நிலவரம்:


அதிகபட்ச வெப்பநிலை: திருச்சி விமான நிலையம் : 39.3° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 18.5° செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகத்தில் ஏனைய தமிழகத்தில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.