தமிழ்நாட்டில் இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


15 மாவட்டங்கள்: 


திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரைக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


 






அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:


06.11.2024: 
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.11.2024:
கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள்ள தமிழகத்தில் ஓரரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
08.11.2024:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், 'மதுரை, விருதுநகர் தென்காசி திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், காரைக்கால் பகுதிகளிலும் இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09.11.2024: 
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சரிக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.11.2024:
தென்தமிழகத்தில் வருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11.11.2024: 
தமிழகத்தில் ஒரிக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பளடுகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகருக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஓட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.