தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்வது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாடு பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே பெரிதும் நம்பியிருக்கிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையே தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிகளவு பெய்ததால், வடகிழக்கு பருவமழையும் அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16,794 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 11,736 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 10,706 கன அடியாக குறைந்துள்ளது.