✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

TN Rain: ஒரு வாரத்துக்கு மழை இருக்கு.! இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு.! வானிலை மைய இயக்குநர் பேட்டி.!

செல்வகுமார்   |  10 Oct 2024 06:20 PM (IST)

Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டி ஒரு வாரத்திற்கு மழை இருக்கும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

TN Rain: ஒரு வாரத்துக்கு மழை இருக்கு.! இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு.! வானிலை மைய இயக்குநர் பேட்டி.!

மழை ( செயற்கை நுண்ணறிவு படம் )

தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு வானிலை தொடர்பாக, அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

கச்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரேபிக் கடல். கர்நாடகா - கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 12 ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல -மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

10.10.2024; தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், விழுப்புரம். கடலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, பெரம்பலூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11.10.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி. திருப்பத்தூர். தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12:10,2024: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால், பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Published at: 10 Oct 2024 05:35 PM (IST)
Tags:RAIN#tamilnaduTamilnadu Rain Updates
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • TN Rain: ஒரு வாரத்துக்கு மழை இருக்கு.! இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு.! வானிலை மைய இயக்குநர் பேட்டி.!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.