” ஒரு மாவட்டத்தில் மட்டும் இரவு மழை பெய்யும் ” அடுத்த 3 மணி நேரத்திற்கு வானிலை அப்டேட்!

Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நிலவரம் குறித்த தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

”காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது”

இன்றைய வானிலை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளதாவது “ தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 08. 30 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (08-04-2025), வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும். மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து, தென்மேற்கு வங்கக் கடல் வழியாக தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியா, பாகிஸ்தானுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: எதற்காக?

நாளைய வானிலை ( 08-04-2025 ):

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 5  மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 09-04-2025 முதல் 13-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: டார்கெட் முடிக்காததால், ஊழியர் கழுத்தில் பெல்ட் கட்டி நாய் போல் குரைக்க வைத்த கொடூரம்?

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோர பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள்:

10-04-2025 மற்றும் 11-04-2025 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

நாளை 07-04-2025, அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மறுநாள் 08-04-2025, தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்களை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola