குடையுடன் வெளியே போங்க! இன்று மாலை 13 மாவட்டங்களில் மழை..வானிலை மையம்
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் மதுரை, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கு வானிலை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இந்நிலையில், அடுத்த ஏழு இனங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தகவலை பார்ப்போம்.
இன்று மற்றும் நாளை ( 19-04-2025 மற்றும் 20-04-2025 ) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனையடுத்து, 21-04-2025 முதல் 25-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read: Subhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்: சுபான்ஷூ சுக்லா யார்?
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
18-04-2025 முதல் 21-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
22-04-2025 மற்றும் 23-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
20-04-2025 முதல் 23-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19-04-2025 முதல் 21-04-2025 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட் வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை :
சென்னையை பொறுத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.