விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் செல்ல கூடிய நான்கு வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லாவை, அமெரிக்காவின் விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல பயிற்சிகளை மேற்கொள்ளப்படும். இந்த பயிற்சியானது, இந்தியாவின் எதிர்கால ககன்யான் திட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் யார் இந்த சுபான்ஷு சுக்லா என்பது குறித்து பார்ப்போம்.
”சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்”
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முக்கிய எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டமான நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியா தனது விண்வெளி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை பதிவு செய்ய தயாராக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்திய விண்வெளி வீரரைச் சுமந்து செல்லும் சர்வதேச விண்வெளி திட்டத்தை, அடுத்த மாதம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா தனது அடுத்த விண்வெளி மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளது. வரும் மே மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் (ஐஎஸ்எஸ்) பயணம் மேற்கொள்ள இந்தியக் குழுவின் கேப்டன் சுபான்ஷு சுக்லா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
யார், இந்த சுபான்ஷு சுக்லா.
- சுபான்சு சுக்லா, 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிறந்தார்.
- இவர் பள்ளிப்படிப்பிற்கு பின்னர், தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் இந்திய விமானப்படை அகாடமியில் பயின்று, இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார்.
- 2006 ஜூன் 17 அன்று இந்திய விமானப்படையில் பைட்டர் பைலட் ஆக சேர்ந்தார். அவர் சுமார் 2,000 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர்.
- இவர் Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier 228 மற்றும் An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களில் இயக்கியபவர் .
- கடந்த 2024 ஆண்டு மார்ச் மாதத்தில், அவர் "குரூப் கேப்டன்" என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டது.
- மேலும், கடந்த 2019-ல், அவர் ரஷியாவின் யூரி காகரின் கோஸ்மோனாட் பயிற்சி மையத்தில் அடிப்படை விண்வெளி பயிற்சி பெற்றார்.
- இந்தியாவின் முதல் மனித விண்வெளி திட்டமான ககன்யானில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவராக உள்ளார்.
- இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் ஒரு முன்னோட்டமாகவும், பயிற்சியாகவும் அடுத்த மாதம் ( மே )எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்.
Also Read: வியக்கவைக்கும் படங்கள்! விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்தியா