தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (அக்.22) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.23) காலை மத்தியக் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியக் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.


இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்கும்.


23.10.2022 மற்றும் 24.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


25.10.2022 முதல் 27.10.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பருதிகளில் இடி மின்னதுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


உசிலம்பட்டி மணிமுத்தாறு (திருநெல்வேலி) 5. அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 4, பெலாந்துறை (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா சேந்தமங்கலம் (நாமக்கல்), சீர்காளி (மயிலாடுதுறை), வாலிநோக்கம் (இராமநாதபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), குறிஞ்சிப்பாடி (கடலூர்), குரங்குடி (தூத்துக்குடி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), தொழுதூர் (கடலூர்), டி.ஜி.பி. அலுவலகம் (சென்னை), திருச்சி விமான நிலையம் (திருச்சி) தலா 2. பொன்மலை (திருச்சி). கிருஷ்ணராயபுரம் (கரூர்), மாயனூர் (கரூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), புதுச்சேரி (புதுச்சேரி), சேத்தியாத்தோப் (கடலூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), தெம்பரம் AWS (கடலூர்), பாம்பன் (ராமநாதபுரம்), தக்கலை (கன்னியாகுமரி), வேடசந்தூர் (திண்டுக்கல்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), செந்துறை (அரியதார்), பாபநாசம் (திருநெல்வேலி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), நாங்குநேரி (திருநெல்வேலி), விருதாச்சலம் (கடலூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), செட்டிகுளம் (பெரம்பலூர்), பெரம்பதூர் (பெரம்பலூர்), வைப்பார் (தூத்துக்குடி), ஈரோடு, மோகனூர் (நாமக்கல்), அன்னவாசல் (புதுக்கோட்டை) கும்பகோணம் (தஞ்சாவூர்), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), அகரம் கூர் (பெரம்பலூர்), வம்பன் கே.வி.கே. (ராமநாதபுரம்), அருப்புக்கோட்டை கே.வி.கே. (விருட்} தலா 1,


மீனவர்களுக்கான எச்சரிக்கை


23.10.2022: தென் கிழக்கு மற்றும் மத்தியக் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


ஒடிசா - மேற்கு வங்காளக் கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்


24.10.2022: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


ஒடிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


25.10.20222: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வங்கதேச கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


ஒடிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.