Southern Railway: ரயில் பயணிகளின் வசதிக்காக க்யூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.


சென்னையில் இருந்து தினந்தோறும் கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியகுமரி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால் வழக்கமான வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


இதனால் ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் பண்டிகைக் காலத்தில் அதிகமான மக்கள் பயணம் செய்வது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையிலும், ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. பண்டிகை காலத்தில பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் டிக்கெட் எடுப்பதற்கு சீரமம் உள்ளது. நீண்ட நேரம் டிக்கெட் கவுன்டரில் மக்கள் காத்திருக்கும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி, புறநகர் டிக்கெட் கவுன்டர்களிலும் தினசரி வேலை என் போன்ற காரணங்களுக்கு சென்று வருவோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட வரிசையில் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெறும் நிலை உள்ளது.  இதனால், பல இடங்களில் டிக்கெட் எடுப்பதில் தாமதம் என புகார் எழுந்துள்ளது. பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது






சென்னை விரைவு மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் உள்ள சிரமத்தை தவிர்க்க தெற்கு ரயில்வே தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தை டிக்கெட் கவுன்டர்களில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களாகவே டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.