தமிழ்நாட்டில் நாளை பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


ஆர்ஞ்சு அலர்ட்:


நாளை, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது வானிலை மையம். 


நாளை மறுநாள் திங்கட்கிழமை, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல்  மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


மேலும், நாளை ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவக்ங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இன்று இரவு:


TN Rain Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், மற்றும் கோவை ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


இன்று முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதிவரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரை, இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 


மேற்குறிப்பிட்ட நாட்களில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என் அறிவுறுத்தப்படுகிறார்கள்.