ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • TN Rain: இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழை இருக்கு..! பத்திரமா இருங்க...!

TN Rain: இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழை இருக்கு..! பத்திரமா இருங்க...!

Ad
செல்வகுமார் Updated at: 19 Jul 2024 09:17 PM (IST)

TN Rain: தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TN Rain: இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழை இருக்கு..! பத்திரமா இருங்க...!

மழை ( கோப்பு படம் )

NEXT PREV


இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் உள்ள ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்ப்பது  நல்லது என அறிவுறுத்தப்படுகிறார்கள் .


26 மாவட்டங்களில் மழை: 


கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  நீலகிரி, ராணிப்பேட்டை , செங்கல்பட்டு,  வேலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,தர்மபுரி, கரூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் , இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்.



 


இதையடுத்து வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (19.07.2024) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மழை:


நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,தேனி, திருப்பூர்,கோவை, ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கலாம்.



Published at: 19 Jul 2024 08:56 PM (IST)
Tags: IMD tamilnadu TN Rain Weather RAIN
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.