வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


அதன் படி இன்று  தென்தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, நாளை, நாளை மறுநாள், புதன் கிழமை ஆகிய நாட்களில்  மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.


தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை


தமிழகத்தில் கோடை வெயிலாலும், மின்வெட்டினாலும் மக்கள் அவதியுற்று வந்த நிலையில், அதனைத் தணிக்கும் வகையில் தமிழகத்தின்  பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. தேனி குரங்கனி, பொடிநாயக்கனூர், மேலசொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2 மணி நேரமாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதே போல திருப்பூர் உடுமலை பேட்டை பகுதியிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. அதே போல ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 3 மணி நேரமாக மழைபொழிந்தது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பொத்தனூர் உள்ளிட்ட இடங்களிலும் 3 மணி நேரத்திற்கும் கனமழை பெய்தது. அதே போல, கரூர் மாவட்டத்திலும் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. மேட்டூர் மாவட்டத்திலும் மழை கொட்டித்தீர்த்தது. மழை பெய்த காரணமாக, மேட்டூர் அணையின் நீர்வரத்து 3,459 கன அடியில் இருந்து 3,460 கனடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் 105.40 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 72.01 டி.எம்.சியாக இருக்கிறது.  


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண