Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை


மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அமைச்சர் வீட்டு அருகே சாலையில நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் பாலசுப்ரமணியனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளனர். அப்போது ”காப்பாற்றுங்கள்” எனக்கூறி பாலசுப்பிரமணியன் கூச்சலிட்டபடி ஓடிய நிலையில் மர்ம கும்பலானது திடீரென அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது தெரியவருகிறது. இதில் படுகாயத்துடன் கிடந்த பாலசுப்பிரமணியரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்;


தமிழ்நாடு முழுவதும் உள்துறைச் செயலாளர் அமுதா  உட்பட15 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


CM Stalin: காவிரி விவகாரம் - தொடங்கியது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு


CM Stalin: தமிழ்நாடு நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.


CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.  இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது” என முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது


“பிரதமரை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி” கையில் கொண்டு போன ஃபைலில் இருந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திடீரென சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 3வது மூறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவும் மரியாதை நிமித்தமாகவும் ஆர்.என்.ரவி மோடியை சந்தித்ததாக கூறப்பட்டாலும் தமிழ்நாடு குறித்து அந்த சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Coimbatore Orange Alert: கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை ; மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை


கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது.


காலை உணவுத்திட்டத்துக்கு முதலமைச்சர் பெயர் சூட்டுங்க.. வலியுறுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ்


‘காலை உணவு’ திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த திட்டம் தெலங்கானாவிலும், கனடாவில் ‘தேசிய உணவு திட்டம்’ என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.