தமிழ்நாடு மின்சார வாரியமானது மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும். 


தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். 


இந்நிலையில் , நாளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் விடுமுறை என்பதால், மக்கள் வீட்டில் இருக்கும் காரணத்தால் மின்தடை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Also Read:Budget Memes: வைரலாகும் பட்ஜெட் மீம்ஸ்கள்: இது மத்திய பட்ஜெட் இல்லை, பீகார் பட்ஜெட்


மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக வழக்கம் இருக்கும் நிலையில், நாளை பிப்ரவரி 2 மின் தடை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read:பட்ஜெட்டில் ரூ.14.8 லட்சம் கோடி கடன் வாங்கி, 12 லட்சம் கோடி வட்டியா.! ஷாக்கான மக்கள்