- TN Rain Alert: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? இன்றைய வானிலை நிலவரம்..
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-to-occur-in-6-districts-today-due-to-the-low-atmospheric-circulation-and-heat-wave-prevailing-over-tamil-nadu-meteorological-department-said-119976/amp,
- ஆசனவாயில் செல்போன்... ஒரே வாரத்தில் நடத்த இரண்டாவது சம்பவம்... சேலம் மத்திய சிறையில் நடப்பது என்ன?
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஆசனவாயில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/salem/salem-central-jail-cell-phone-seized-from-anus-for-the-second-time-in-a-week-119973/amp
- Madras High Court: சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக எஸ்.வி கங்காபூர்வாலா பதவியேற்றார்..!
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/sv-gangapoorwala-sworn-in-as-chief-justice-of-madras-high-court-119944/amp
- Police Department Report :போதை பொருள் கடத்தினால் குண்டர் சட்டம்தான்... சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை!
சென்னை பெருநகரில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் செல்போன் மூலம் தகவல் அளிக்கலாம் என சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-police-commissioner-shankar-jiwal-haswarned-that-action-will-be-taken-under-the-gangster-prevention-act-if-smuggling-drugs-119884/amp
- Kiruthiga Udhayanidhi: செய்திதான் போலி.. போட்டோவாச்சும் நல்லா வைங்க.. ட்வீட் போட்ட கிருத்திகா.. அமைச்சர் உதயநிதி ரீ ட்வீட்..
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையை சார்ந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியதாக இன்று அமலாக்கத்துறை தெரிவித்தது. அதன்படி, அறக்கட்டளைக்கு சொந்தமான 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், வங்கிக் கணக்கில் இருந்த 34.7 லட்சமும் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “25/5/2023 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. M/S உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் அதுதொடர்பான வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது. கல்லல் க்ரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதான வழக்குகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என பதிவிடப்பட்டு இருந்தது.