சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வாரத்தில் 5 நாட்கள் உறவினர்கள் சந்திக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளை 3 நாட்களும், தண்டனை கைதிகளை 2 நாட்களும் பார்க்க முடியும். அப்போது அவர்களுக்கு தேவையான பழங்கள், பிஸ்கெட்டுகளை உறவினர்கள் வழங்குவார்கள்.


அதேநேரத்தில் முன்பு கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் பார்த்தாலும் 5 அடி தூரத்தில் கம்பி வலைக்கு பின்னால் நின்று தான் பார்க்க முடியும். அதுவும் கைதிகள் பேசுவது உறவினர்களுக்கும், உறவினர்கள் பேசுவது கைதிகளுக்கும் கேட்காது. மனு பார்க்கும் இடத்தில் ஒரே சத்தமாக இருக்கும். இந்ததுயரத்தை போக்கும் வகையில் இன்டர்காம் வசதி செய்து கொடுக்கப்பட்டது. மனு பார்க்கும் இடத்தில் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டே இன்டர்காம் மூலம் தெளிவாக பேசலாம். அதே போல வீடியோகால் மூலமும் குடும்பத்தினருடன் பேசும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 



இத்தனை வசதியையும் தாண்டி கைதிகள் ரகசியமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதிகாரிகளுக்கு தெரியாமல் இல்லை. சமீப காலமாக சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு சிறைக்கு வரும் கைதிகள் ஆசன வாய் வழியாக செல்போனை கடத்தி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதுபோன்ற சம்பவம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக சேலம் மத்திய சிறையில் நடந்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி காலை 6 மணியளவில் குமரகுரு என்ற கைதியின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் சிறை வார்டன்கள் அவரை கண்காணித்தனர். அவர் காலை தூக்கி தூக்கி வித்தியாசமாக நடந்தார். அவரை அலேக்காக தூக்கிகொண்டு சென்ற வார்டன்கள் ஜெயிலர் அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர், ஆசனவாயில் செல்போனை வைத்திருப்பதாக தெரிவித்தார். இது குறித்து ஜெயிலர் மதிவாணனுக்கு தகவல் தெரிவித்து அவர் வரவழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் உள்ளே இருந்த செல்போனை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கழிவறைக்கு தூக்கிச் சென்று எடுக்க வைத்தனர். முக்கால் மணி நேரத்திற்கு பிறகு கேரிபேக்கில் சுற்றப்பட்ட சிறிய செல் போன் ஒன்று வெளியே வந்தது.


அதன்பிறகே அதிகாரிகள் பெருமூச்சு விட்டனர். 3 இஞ்ச் நீளமும், ஒன்றரை இஞ்ச் அகல மும் கொண்ட இந்த செல்போன் சீனா தயாரிப்பாகும் பெரும்பாலும் இது சென்னையில்தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கேரி பேக்கில் சுற்றி வெளியே வந்த இந்த செல்போனை பத்திரமாக எடுத்து கழுவினர் தொடர் விசாரணையில் மதுரையை சேர்ந்த கொலை வழக்கு கைதி தன்னிடம் கொடுத்ததாகவும், அதனை பத்திரமாக ஆசனவாயில் வைக்குமாறு கூறியதாக அதிகாரிகளிடம் கைதி குமரகுரு தெரிவித்தார். இதையடுத்து கொலை வழக்கு கைதியை அதிகாரி ஒருவர் ரகசியமாக விசாரித்தார், இவ்வாறு செல்போன் பறிமுதல் செய்யப்படும்போது, அதனை கொடுத்தவருக்கும் தண்டனையாக ஒருமாதம் தனியறையில் அடைக்கப்படுவது வழக்கம். உறவினர்களையும் பார்க்க அனுமதி கிடையாது. இது சிறை விதியில் உள்ளது. ஆனால் கைதி குமரகுருவை மட்டும் தனியறையில் வைத்த அதிகாரிகள், கொலை வழக்கு கைதிக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லை. 



இதே போன்ற சம்பவம் நேற்று மீண்டும் சேலம் மத்திய சிறையில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்ற வழிப்பறிக்கை நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் அவரை பிடித்து விசாரித்தபோது தன் ஆசனவாயில் செல்போனை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதை எடுத்து அவரை வெளிவரைக்கு தூக்கிச் சென்ற சிறை காவலர்கள் அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கவரின் சுற்றி வைத்திருந்த செல்போனை மீட்டனர். அந்தக் கவரில் செல்போன், பேட்டரி, சிம் இருந்துள்ளது. இதனை இன்னொரு கைதியான ராஜ்குமார் கொடுத்ததாக விசாரணையில் பிரவீன் தெரிவித்துள்ளார். இதனை எடுத்து அவரிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய சிறையில் கைதி ஒருவர் ஆசனவாயிலில் செல்போன் பதுக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.