- Kilambakkam Bus Terminal: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இத்தனை வசதிகளா.. QR கோட் தொடங்கி லிஃப்ட் வரை..
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைத்தார். மேலும் படிக்க
- Vijayakanth: பொது இடத்தில் விஜயகாந்துக்கு சிலை, மணிமண்டபம்: பிரேமலதா கோரிக்கை
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. மேலும் படிக்க
- TN Rain Alert: குமரிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- New Year Safety: சென்னையில் பட்டாசு வெடிக்க தடை, பைக் பந்தயம் செல்ல தடை.. புத்தாண்டுக்கு வெளியான கட்டுப்பாடுகள்!
2023 ம் ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டான 2024ம் ஆண்டு வர, இன்னும் ஒரு நாளே உள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்க உலக நாடுகள் அனைத்து மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. சென்னையில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட 18,000 காவல் அதிகாரிகள் தயாராக உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது அவையும் பின்வருமாறு. மேலும் படிக்க
- Kilambakkam Bus Stand: எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து செல்லும்; கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்கும்..? - அமைச்சர் சிவசங்கர்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் பேருந்து நிலையத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமாக கூறினார். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொருத்தவரை, கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயங்கக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும். பெங்களூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயங்கக்கூடிய பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லும். மேலும் படிக்க