• அரசுப்பள்ளிக்கு அள்ளிக்கொடுத்த ஆயி அம்மாள்; குடியரசு தினத்தன்று சிறப்பு விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி அம்மாள் என்னும் பூரணம். இவரின் கணவர் உக்கிரபாண்டியன்  கனரா வங்கியில் வேலை பார்த்து வந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணிக்க, வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி அம்மாளுக்குக் கிடைத்தது இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மேலும் படிக்க



  • CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்... சர்வாதிகார போக்கு அகல” - முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல்


முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். மேலும் படிக்க



  • Pongal Awards: தமிழ்நாடு அரசு சார்பில் 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


2024ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மூவாயிரத்து 184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய 3,184 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பதக்கங்கள் தரப்பட உள்ளன. காவலர், காவலர் நிலை - 1, சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பேருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும் படிக்க



  • Bhogi Air Quality Chennai: தொடங்கியது போகி கொண்டாட்டம் - சென்னையை சூழ்ந்த புகை மூட்டம்; விமான சேவை பாதிப்பு!


பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். மேலும் படிக்க



  • Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..


கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும் படிக்க