• TN Rain Alert: தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும்..


வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும்.

   ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க



  • Pongal 2024: மதுரையில் 50 கிராம் மல்லிகை பூ ரூ.150க்கு விற்பனை; மற்ற பூக்களின் விலை என்ன..?


தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிலும், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் வரும் ’பொங்கல்’ என்று அழைக்கப்படும் இந்த திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க



  • Pongal Wishes: 'உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்' - பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..


உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் திருநாள், 16 ஆம் தேதி மாட்டு பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள்.  விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். மேலும் படிக்க



  • O Panneer Selvam: நிதி நெருக்கடியால் ரேசன் பொருட்கள் விநியோகத்தை நிறுத்துவதா? தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்


கடும் நிதி நெருக்கடி காரணமாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நியாவிலைக்கடையில் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்படுவது என்பது திமுக அரசு நிதி மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றது என சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • Pongal 2024: களைக்கட்டும் பொங்கல்: கோயம்பேட்டில் பொருட்களை வாங்க குவியும் பொது மக்கள்..


தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள். விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். மேலும் படிக்க