பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம். 




சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருந்தது. தற்போது 5ம் இடத்தில் உள்ளது. சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால்தான் வளர்ச்சி பெற்று வருகின்றன.  30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம். 10 கோடி  பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியம். 


பரந்தூர் விமான நிலையம்:


இந்தியாவில் பல மாநிலங்களில் விமான நிலையங்கள் நகரங்களில் இருந்து தொலைவில் தான் இருக்கின்றன. பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ தள்ளி வருவதற்கு காரணம் இருக்கிறது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் விளைநிலங்களாக இருப்பதால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 


பரந்தூர் விமான நிலையம்: 1998 ஆண்டு தொடங்கிய சென்னை இரண்டாம் விமானம் நிலையம் பேச்சு .. கடந்து வந்த பாதை இதுதான்..!



  • 1998 ஏப்ரல் மாதம் மத்திய விமான துறை அமைச்சர் ஆனந்தகுமார் சென்னைக்கு இரண்டாவது ஏர்போர்ட் தேவைப்படுகிறது என முன்மொழிந்தார்.

  • 1998 அக்டோபர் மாதம் சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக முதல் உயர்மட்ட குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

  • 1998 அக்டோபர் மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு, சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக  பணிகளை முன்மொழிவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்

  • 1998 அக்டோபர் மாதம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை ஆணையம் ,  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்  தெற்கு பகுதில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இடம் ஒன்றை தேர்வு செய்தனர். 1999 நவம்பர் மாதம் 2000 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • 2000 நவம்பர் மாதம் போரூர் அருகில் மேற்கு மீனம்பாக்கத்தில் 3000 ஏக்கரில் , அமைய உள்ளதாக தகவல்  வெளியானது.

  • 2005 ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் வடக்கே, சுமார் 1457 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது .

  • 2007 மே மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே  4820 ஏக்கர் பரப்பளவில், பசுமை விமானம்  நிலையம் அமைக்க முடிவு செய்தார்.

  • 2012 மார்ச் மாதம் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ஆகும் என தமிழ்நாடு அரசு  திட்டம் தீட்டியது.

  • 2022 ஜனவரி மாதம் தமிழ் நாட்டில் 4 இடங்கள் தேர்வு செய்தனர். படாளம், திருப்போரூர் , பன்ணுர் ,பரந்தூர் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.

  • 2022 மார்ச் மாதம் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு  மேற்கொண்டனர்.

  • 2022 ஆகஸ்ட் மாதம் சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். 


இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


சர்வதேச ஒப்பந்தப்புள்ளி:


இந்த அறிக்கையில் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது, விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையும் தயாரிக்கும் பணி பற்றியும் விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனையும் இடம் பெற்றுள்ளது.


2069-70 ஆம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும்


பசுமை விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.