- கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய மூவரை தனிப்படை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். அவர்களை பிடிக்க முயன்ற காவலர்களில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதி.
- கோவையில் பாலியல் குற்றவாளிகள் 3 பேர் சுட்டுப் பிடிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
- தமிழ்நாட்டில் இன்று SIR பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்.
- தமிழ்நாட்டில், 2026-ல் நடைபெற உள்ள 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை இன்று வெளியிடுகிறது அரசு தேர்வுகள் இயக்ககம்.
- இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் இன்று எழுத்துப்பூர்வ கடிதம் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
- சென்னையில், அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம்உள்ளிட்ட 5 இடங்களில், சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் தொடர்பாக ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,000-க்கும், கிராமிற்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250-க்கும் விற்பனை.
- பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.
- மத்திய கிழக்கு வங்கக்கடல், மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிப்பு.
- கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.