TN Weather Update: வெயிலின் கோரத்தாண்டவம்.. அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை எட்டும்.. எச்சரிக்கும் வானிலை..


தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் மே 1 ஆம் தேதி வரை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க..


Summer Camp: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு.. விவரம் இதோ..


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் படிக்க..


Vande Metro: வருகிறது வந்தே மெட்ரோ.. சென்னை - திருப்பதி.. குறையும் பயண நேரம்.. எங்கெல்லாம் தெரியுமா?


வந்தே பாரத் ரயில்கள் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரங்கள் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதனால் அதிக தூரமுள்ள உள்ள இடங்களின் பயணம் நேரமானது குறைந்துள்ளது. இந்நிலையில் குறைந்த தூரங்களுக்கு இடையேயான இடங்களை இணைக்கும் வகையில், வந்தே மெட்ரோ திட்டத்தை கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும் படிக்க..


VCK Awards 2024: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!


நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பலவேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். மேலும் படிக்க..


Erode: ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது..!


தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏபரல் 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. ஈரோடு மாவட்டத்தில் மக்கள் வாக்களிக்க வசதியாக 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்களித்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் அறைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமிரா பழுதானது. நள்ளிரவு 12 மணி முதல் 30 நிமிடங்கள் வரை கேமிரா இயங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் படிக்க..