- ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது! ஏற்கனவே 3 பேர், நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒருவர் கைது!
- சென்னையில் விரைவில் பயன்பாட்டு வரும் இலவச குடிநீர் ATM கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி மற்றும் மார்க்கெட் பகுதிகள் என 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் நடைபெற்ற வேடுபறி உற்சவம் - பக்தர்கள் தரிசனம்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
- மதுரையில் கோரிப்பாளையம் ஏவி பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த காரில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு. நல்வாய்ப்பாக காரில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள், கார் முழுவதும் தீயில் எரிந்து நாசம். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
- 2026 தேர்தலில் தனித்தே களம் காண்போம் -கோவையில் நாதக சீமான் பேச்சு கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை. 8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம் என பேச்சு
- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று (மே 19) காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
- தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 11.45 செ.மீ., மழை பதிவு
Tamilnadu Roundup: கோடையை குளிர்வித்த மழை! நாங்க 2026-ல் தனித்து தான் போட்டி - சீமான் - 10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 19 May 2025 09:35 AM (IST)
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
Published at: 19 May 2025 09:35 AM (IST)