ஜூன் 2ல் 11 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம்


வரும் ஜூன் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.


மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இது அவரின் தனிப்பட்ட பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த அவர், கடற்கரையில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு, அதன் கட்டட கலையை கண்டு ரசித்தார். தொடர்ந்து படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். அங்கு சுற்றி பார்த்து விட்டு தியான மண்டபத்தில் தியானம் செய்தார். நாளை மதியம் 3 மணி வரை விவேகானந்தர் பாறையில் இருக்கும் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளும் அவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. தேர்தல் விதிமீறலில் பிரதமர் மோடி ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது. இப்படியான நிலையில் இன்று காலை காவி உடையில் சூரிய நமஸ்காரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மீண்டும் தியானத்துக்கு சென்று விட்டார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து - டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல்


இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும் நிலையில், இந்தியா கூட்டணி ஜூன் 1ல் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என கூறப்படுகிறது


விழுப்புரத்தில் உயிரிழந்த சமையல் மாஸ்டர் உடல்; கலெக்டர் முன்னிலையில் 2வது முறையாக புதைப்பு


விழுப்புரம்: விழுப்புரத்தில் டாஸ்மாக் பார் சமையல் மாஸ்டர் ராஜா போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இரண்டாவது முறையாக உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ராஜாவின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆட்சியர் பழனி முன்னிலையில் இரண்டாவது முறையாக புதைக்கபட்டது.


சென்னையில் அதிர்ச்சி! வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!


சென்னை திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் சக்தி என்ற 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவன் திருநின்றவூர் கோமதிபுரத்தை சேர்ந்த ஹரிசுதன் என்ற மாணவன் சிறுவயதில் இருந்த இதய நோய் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று ( மே 30ம் தேதி) மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்தாண்டு இவரது அம்மாவும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருந்தார் என்று கூறப்படுகிறது


ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சொன்னதில் தவறில்லை - டிடிவி தினகரன்


“ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சொன்னதில் தவறில்லை. ஜெயலலிதா அனைவருக்கும் பொதுவானவர். ஜெயக்குமார் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது” என டிடிவி தினகரன் கூறியுள்ளார். வேலூருக்கு வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.