Modi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. ! கன்னியாகுமரி தியானம்!


பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை பஞ்சாப்பில் முடித்துவிட்டு இன்று  மே 30ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவர், கன்னியாகுமரிக்கு சென்று அங்குள்ள விவேகானந்தர் பாறையில், மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி காலை வரை தியானம் நடத்த திட்டமிட்டுள்ளார்.


TN Weather Update: தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. ஜூன் 1,2,3 ஆகிய தேதிகளில் கொட்டப்போகும் மழை..


தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழத்தில்  சில பகுதிகளிலும் இன்று ( 30-05-2024) துவங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம், தென்தமிழக  பகுதிகளின்  மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று, தமிழகத்தில்  ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை..


திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்களா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


வீட்டிற்குள் புகுந்து கோழியை பிடித்து சென்ற சிறுத்தை; கோவை அருகே மக்கள் அச்சம்


கோவை அருகே குடியிருப்புக்குள் புகுந்து கோழி ஒன்றை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து கோழியை லாபகமாக வேட்டையாடி விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.


அன்பில் சுந்தர சோழன் செப்பு தகடு மாயம் ; தகவல் கொடுப்போருக்கு சன்மானம் - போலீஸ் அறிவிப்பு


திருச்சி மாவட்டம்,  லால்குடி, அன்பிலில் உள்ள சிவன் கோவிலில் மிகப் பழமையான செப்பு தகடு இருந்தது. இதை அன்பில் தகடு என்று சொல்வார்கள். இச்செப்பு தகடு மாமன்னர் சுந்தரச்சோழனால் வழங்கப்பட்டது, சுந்தராசோழன் ஆட்சிக்கு வந்த 4ஆம் ஆண்டில் கி பி. 961ல் அவருடைய மந்திரிக்கு 10 வேலி நிலத்தை வழங்கிய விபரம் மற்றும் மாதவ பட்டர் முன்னோர்கள் ஸ்ரீரெங்கம் அரங்கநாதர் கோவிலில் செய்த தொண்டுகள் பற்றிய செய்திகளும் இச்செப்பேட்டில் உள்ளது. இத்தகு மதிப்பு மிக்க செப்பு தகடை மீட்டு நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உலகுக்கு வெளிகாட்டுவது நமது கடமை. இந்நிலையில் சுந்தர சோழன் அளித்த அன்பில் செப்பேட்டை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


அகில இந்திய ஹாக்கி போட்டி: இந்தியன் பேங்க் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய போபால்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் அகில இந்திய அளவிலான பல்வேறு  ஹாக்கி அணிகள், அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.