விழுப்புரம்: பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை அவர் மறைமுகமாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவதாக எடுத்துகொள்ள முடியாது என்றும் அனைவருக்கும் தியானம் மேற்கொள்ளும் உரிமை உள்ளதாகவும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்திற்கு வேண்டியதை போராடி பெறுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் 

இளைஞர்களுக்கு 6 லட்சம் அரசு வேலை சிறப்பு திட்டத்தினை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் மக்களவை தேர்தல் இறுதிகட்டமாக பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தேர்தல் பரப்புரை முடிவுகிறது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமாவது உறுதி என்றும் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும் பாமக பாஜக தமிழகத்தில் 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

பாஜக மத்தியில் அமைந்தவுடன் தமிழகத்திற்கு தேவையானதை மத்திய அரசிடமிருந்து போராட்டி பெறுவோம் எனவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு வேலை வாய்ப்பு 2.5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் 2758 பேருக்கு மட்டும் தான் தேர்வாணையம் மூலம் அரசு வேலை வழங்கப்படுமென குற்றஞ்சாட்டினார். கடந்த மூன்றாண்டுகளில் அரசு பணிகளில் இருந்து 1 லட்சம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆறு லட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகளில் வேலை எப்படி வழங்க முடியுமென கேள்வி எழுப்பினார். அரசு வேலை குறித்த அறிவிப்பினை தாமத்திக்காமல் அழிக்க வேண்டும்.

 

அரசுப்பணிகளுக்கு நேர்முக தேர்வு கூடாதென்றும் தோட்டக்கலை அலுவலர், வேளாண் அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்  நேர்முக தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகத்தில் அனைத்து பணிகளுக்கும் நேர்முக தேர்வினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் சேவை பெறும் உரிமை  சட்டத்தை கொண்டு வர வேண்டுமென கூறினார்.

 

தமிழை  கட்டாய பாடமாகவும் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழை வளர்ப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் வளர்ச்சிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். தமிழை கட்டாய பாடமாக சட்டப்பேரவையில் சட்டமியன்ற வேண்டும் எல்லா காலங்களிலும் காய்கறிகள் விலை சீராக கிடைக்க அனைத்து காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் கொள்முதல் விலையை நிர்ணயிக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தினார். 

 

கந்துவட்டி தற்கொலை


கந்துவட்டி தற்கொலைகளை தடுக்க வேண்டுமெனவும் விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றிய இருவர் மகள் பேரக்குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளானர். இவர்கள் கந்துவட்டிக்கு பணம் பெற்றதனால் உயிரிழந்ததாகவும், தமிழகத்தில் கந்துவட்டி தடை செய்யபட்டபோதிலும் கந்துவட்டி தற்கொலை நடைபெறுவது காவல் துறையினர் கந்துவட்டி கும்பலுக்கு துணைபோவதால் தான் என கூறினார். கந்துவட்டி தடை சட்டத்தினை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமந்திரி  வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்வந்திருப்பதை அடுத்து 50 அதிகாரிகள் மீது கையூட்டு தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஏழை எளிய மக்களுக்கு வழங்கபட்ட திட்டத்தில் ஊழல் செய்தவர்களை மன்னிக்கவே கூடாது என்றும் விழுப்புரம் மாவட்டத்தில் குடிசைகள் அதிகம் என்பதால் இம்மாவட்டத்திற்கு நிதி அதிகம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தெரிவித்தார். விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் நான்கு வழி சாலை விரிவுபடுத்தும் பணி 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இல்லாத சாலைக்கு சுங்ககட்டணம் வசூலிக்கபடுவதால் விரைந்து காலநிர்ணயம் செய்து பணிகளை முடிக்க  வேண்டுமென கூறினார். 

பிரதமர் தியானம்


பிரதமர் தியானம் மேற்கொள்ளதில் எந்த தவறும் இல்லை அவர் மறைமுகமாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவதாக எடுத்துகொள்ள முடியாது என்றும் அனைவருக்கும் தியானம் மேற்கொள்ளும் உரிமை 2019 ஆம் ஆண்டு கேதர்நாத்தில் தியானம் மேற்கொண்டார் என தெரிவித்தார். அண்ணாமலை ஜெயலலிதா இந்துதுவா தலைவர் என அவர் கூறுவது அது அவருடைய பார்வை என்றும் பிரதமர் தமிழ் மீது தமிழர்கள் மீது மிகுந்த பற்று கொண்டுள்ளதாகவும் தமிழர்களை அவர் அவமதிக்க மாட்டார் என்றும் மக்கள் பயன்பெறும் தென்பென்னை பாலாறு திட்டம் நந்தன் கால்வாய் திட்டங்கள் கிடப்பில் போட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.