Yercaud Flower Show: ஏற்காட்டில் தொடங்கியது மலர் காட்சி... கண்ணை கவரும் வண்ண வண்ண மலர்கள்


ஏற்காட்டில் 47- வது கோடை விழா மற்றும் மலர் காட்சி கோலகலமாக தொடங்கியது. வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர்  அபூர்வா,தோட்டக்கலை மழைப்பயிர்கள் துறை இயக்குனர் பெ.குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தாதேவி ஆகியோர் கோடை விழா மற்றும் மலர் காட்சி தொடங்கி வைத்தனர்


TN Rain Alert: உஷார் மக்களே.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!


தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுகப்பட்டுள்ளது.


டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். டென்மார்க் நாட்டில் கல்வி வளர்ச்சி பற்றியும், அங்குள்ள வாய்ப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்கள் சார்ந்த திட்டங்கள் குறித்து அந்நாட்டு கல்வித்துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.


சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?


சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சய். வி.  கங்கபூர்வாலா நாளை (மே 23) பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவன் மே 24 முதல் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


1963ஆம் ஆண்டு பிறந்த ஆர்.மகாதேவன், 1989ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். சிவில், கிரிமினல் வழக்குகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நீதிபதி மகாதேவன், மத்திய, மாநில அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி உள்ளார். சென்னை சட்டக் கல்லூரியில் படித்த நீதிபதி மகாதேவன், 1989ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 25 ஆண்டுகளாகச் சட்டப் பணியாற்றி வரும் இவர், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு மேல் நடத்தி உள்ளார்.


Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!


இர்ஃபான் கடந்தாண்டு மே மாதம் ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். ஹசீஃபா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனிடையே துபாய் சென்றுள்ள இர்ஃபான் அங்கு தனது மனைவியின் கருவில் இருக்கும் சுசு ஆணா? பெண்ணா?என்பதை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் நண்பர்களுடன் இணைந்து பாலினத்தை அறிவிப்பது பற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார்.  அதேசமயம் மாநில சுகாதாரத்துறை சார்பில் இர்ஃபானுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் அவர் வாட்ஸ் ஆப் மற்றும் தொலைபேசி மூலம் மருத்துவ விசாரணை குழுவினரிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.