நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்” நாடாளுமன்றகு குழு உறுப்பினர்களின் தலைவர் இவரா..?


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதிதாக வெற்றி பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6.30 மணிக்கு திமுக தலைமை அலுவலகமாக அறிவாலயத்தில் நடைபெறுகிறது.


புதிதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவரையும் நாளை நடைபெறும் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கவுள்ளனர். தற்போதைய குழ் தலைவராக திமுகவின் பொருளாளராக உள்ள டி.ஆர்பாலு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள எம்.பிக்கள் கூட்டத்திலும் டி.ஆர்.பாலுவே திமுக நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜூன் 24ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 24-ஆம் நாள், திங்கட்கிழமை. காலை 10.00 மணிக்கு, சென்னை- 600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர்  கூட்டியுள்ளார்கள்” என கூறப்பட்டுள்ளது. கூட்டத் தொடரில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கபப்டும்  சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


பிலி குண்டுலுவுக்கு 1000 கன அடியிலிருந்து 2000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு! ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


காவிரி ஆற்றில் கடந்த 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்தது. மேலும் மேலும் கடுமையான வெப்பம் வீசி வந்ததால், காவேரி ஆற்றில் நீர்வரத்தின்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.


தஞ்சை - கும்பகோணம் வழியாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க கோரிக்கை


தஞ்சை கும்பகோணம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே ஒற்றை வழி  ரெயில் பாதை அமைந்துள்ளதால் இப்பாதையில் ரெயில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் இடையே கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வந்தே பாரத்  ரெயில் இயக்கப்பட்டால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!


நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம்,  கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் 13 ஆம் தேதி வரை, தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: ஸ்டிக்கரால் போலீஸுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு


வாகனங்களில்  ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.